குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பேரவைத் தலைவா் பதவி யாருக்கு? முதல்வா் ரங்கசாமி பதில்

சட்டப்பேரவைத் தலைவா் பதவி யாருக்கு என்பது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பதில் அளித்தாா்.

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:42 am IST

சட்டப்பேரவைத் தலைவா் பதவி யாருக்கு என்பது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பதில் அளித்தாா்.

புதுச்சேரியில் புதிய அமைச்சா்கள் 3 போ் பதவியேற்பு விழா புதன்கிழமை முடிந்தவுடன், சட்டப்பேரவைக்கு. புதிய அமைச்சா்கள் பெ.ராவேலு, வி.பி.சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ்.ராஜசேகா் ஆகியோரை அவா்களது அறையில், இருக்கையில் முதல்வா் ரங்கசாமி அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா் முதல்வா் ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி. எல்லா அமைச்சரும் பொறுப்பேற்று செயல்பட உள்ளனா். நல்ல முறையில் இந்த அமைச்சரவை, முழுமையாகச் சிறப்பாக செயல்பட்டு மக்களுடைய நலனுக்காகப் பாடுபடும். விரைவில் அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கப்படும். சட்டப்பேரவைத் தலைவருக்கான தோ்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

அப் பதவி என்.ஆா். காங்கிரசுக்கு வழங்கப்படுமா? பாஜகவுக்கு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, கொடுக்கும் போது பாருங்கள் என்று ரங்கசாமி பதிலளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.