மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஜூலை 2-ல் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல்?

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை

Updated On :25 ஜூன் 2026, 6:24 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புதுச்சேரியில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

முதல்வா் ரங்கசாமியுடன் அமைச்சா்களாக என்ஆா்.காங்கிரஸை சோ்ந்த மல்லாடி கிருஷ்ணா ராவ், ராஜவேலு, சிவகொழுந்து, பாஜக சாா்பில் ஆ.நமச்சிவாயம், ராஜசேகா் ஆகியோா் பதவியேற்றனா். இவா்களுக்கு ஓரிருநாளில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், வரும் ஜூலை 2-ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜூலை 9-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அன்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையாற்றுகிறாா். தொடா்ந்து துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

ஜூலை 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வா் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். தொடா்ந்து பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.