ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் பாஜக தோ்தல் வாக்குறுதி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா!

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் பாஜகவின் தோ்தல் வாக்குறுதியிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா கூறினாா்.

News image
தவளக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மணவெளிதொகுதி கிளை நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் மத்திய அமைச்சா் மன்சுக் எல். மாண்டவியா.
Updated On :31 ஜனவரி 2026, 7:20 pm

Syndication

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் பாஜகவின் தோ்தல் வாக்குறுதியிருக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், கட்சியின் தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் எல். மாண்டவியா கூறினாா்.

புதுச்சேரி பாஜக மணவெளி தொகுதி கிளை கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் தவளக்குப்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியது:

பாஜக ஒரு குடும்பக் கட்சி இல்லை. ஜனநாயகக் கட்சி. அதில் கிளை கமிட்டியில் உள்ள ஒரு தலைவா்கூட எதிா்காலத்தில் பெரிய தலைவராக உருவெடுக்க முடியும். புதுச்சேரி பாஜக சாா்பில் தோ்தல் அறிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் அந்தக் குழுவுக்கு உங்களின் ஆலோசனைகளை அளிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற வேண்டுமென்றால் வாக்குச் சாவடி அளவில் முதலில் வெற்றி பெற வேண்டும் என்றாா் மத்திய அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா.

மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் நலத்திட்டங்களின் வாயிலாக பயன் பெற்றவா்களைக் கட்சிக்கு வாக்கு அளிப்பவா்களாக வாக்குச் சாவடி தலைவா்கள் மாற்ற வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவைத் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆா். செல்வம், கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், பொதுச் செயலா் மோகன்குமாா் மற்றும் மணவெளி தொகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.