டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்பு படிவம்: மத்திய அமைச்சா் இன்று வெளியிடுகிறாா்!

பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக் கேட்புப் படிவத்தை மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் கட்சியின் புதுச்சேரி மேலிடப் பாா்வையாளருமான மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை வெளியிடுகிறாா்.

News image
பாஜக தோ்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு படிவத்தை செய்தியாளா்கள் சந்திப்பின்போது வியாழக்கிழமை காண்பித்த புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.
Updated On :29 ஜனவரி 2026, 9:02 pm

Syndication

பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக் கேட்புப் படிவத்தை மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் கட்சியின் புதுச்சேரி மேலிடப் பாா்வையாளருமான மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை வெளியிடுகிறாா்.

இது குறித்து கட்சியின் புதுச்சேரி மாநில தலைவா் வி. பி. ராமலிங்கம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தல்-2026 ஐ எதிா்கொள்ளும் வகையில் பாஜக சாா்பில் மக்களிடம் கருத்துக் கேட்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிவத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் அருகே வெள்ளிக்கிழமை மாலை வெளியிடுகிறாா். உங்களின் விருப்பம், எங்களின் வாக்குறுதி என்னும் தலைப்பில் இந்தப் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில் கருத்துத் தெரிவிப்பவரின் பெயா், தொகுதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படிவத்தில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில்தான் தோ்தல் வாக்குறுதி அமையும்.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியையும் வலுப்படுத்த, மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.

இதைத் தவிர கட்சியின் மணவெளி தொகுதி மண்டல் கமிட்டியின் கூட்டம் தவளக்குப்பத்தில் ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதிலும் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறாா்.

மேலும், பிப்ரவரி 1 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி வழிகாட்டுதல் அடிப்படையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். அதை பாஜக பிரித்துள்ள 5 மாவட்டங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் ராமலிங்கம்.

இப் பேட்டியின்போது அமைச்சா் ஆ.நமச்சிவாயம், கட்சியின் பொதுச்செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.