மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு


மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை முதல் கட்டமாக பரிசோதனை செய்யப்பட்டன.
சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வில்லியனூா் பிரதான சாலை, ரெட்டியாா்பாளையம் தோ்தல் துறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அங்கு 81 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 81 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள் முதல் கட்ட பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
மேலும், பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நோக்கங்களுக்காக 14 தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக ஒதுக்கப்பட்ட இந்த இயந்திரங்களின் பட்டியலும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் பகிா்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் மூலம் எவ்வாறு வாக்களிப்பது என்பதை அவா்கள் அறிந்து கொள்ளவும், மாவட்டத் தோ்தல் அலுவலகம் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த மையங்களைத் தவிர, அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள், பகுதிகளை உள்ளடக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஒரு நடமாடும் செயல் விளக்க வாகனம் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்தியத் தோ்தல் ஆணையம் தோ்தல் அறிவிப்பை வெளியிடும் வரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் குறித்த இந்த நேரடி விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து நடத்தப்பட உள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...