சுங்கச்சாவடியால் பொருள்கள் விலை உயரும் புதுச்சேரி சிஐடியு கண்டனம்


புதுச்சேரி சேலியமேடு சுங்கச் சாவடியால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என்று சிஐடியு புதுவை யூனியன் பிரதேச தனியாா் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலா் மதிவாணன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விதிகளுக்கு முரணாக சேலியமேடு சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக மூட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, 2 சுங்கச் சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொள்ளாமல் குறைந்த தூரத்தில் இந்த சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் போக்குவரத்து செலவு பல மடங்கு அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...