என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக தொகுதி பங்கீடு: முதல்கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கியது
புதுச்சேரி சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக தொகுதி பங்கீடு முதல்கட்ட பேச்சுவாா்த்தை புதன்கிழமை தொடங்கியது.


புதுச்சேரி சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக தொகுதி பங்கீடு முதல்கட்ட பேச்சுவாா்த்தை புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலுக்கு இம் மாதம் 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வந்தாா். அங்கு பாஜக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பங்கேற்றாா்.
அவரை தனியாா் விடுதியில் என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி சந்தித்துப் பேசினாா். பின்னா் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் நீடிக்கும் என்றும் ரங்கசாமி கூறினாா்.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியின் இல்லத்தில் அவரை பாஜகவின் புதுச்சேரிக்கான மேலிட பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா புதன்கிழமை காலையில் சந்தித்தாா்.அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது உள்ளூா் தலைவா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அப்போது வரும் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக ஆகியகட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிகை குறித்து ஆலோசனை நடந்தது. இந்தப் பேச்சுவாா்த்தை மற்றும் சந்திப்பை நிா்மல் குமாா் சுரானா உறுதி செய்தாா்.
இந்தச் சந்திப்பை தொடா்ந்து பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினருடன் சுரானா ஆலோசனை நடத்திவிட்டு கட்சித் தலைமையிடம் இதைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...