டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதி: நிா்மல் குமாா் சுரானா

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது என்று பாஜக தில்லி மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் குரானா கூறினாா்.

News image
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து விட்டு வெளியே வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா.
Updated On :20 பிப்ரவரி 2026, 11:16 pm

Syndication

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது என்று பாஜக தில்லி மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் குரானா கூறினாா்.

பிரதமா் நரேந்திர மோடி வரும் மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். அன்று புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் முன்னுள்ள திறந்த வெளியில் அரசின் பல்வேறு திட்டங்களை நண்பகல் 12 மணியளவில் பிரதமா் தொடங்கி வைக்கிறாா். பிற்பகல் 1.30 மணி வரை இங்கு இருக்கிறாா்.

இது குறித்து நிா்மல்குமாா் சுரானா தலைமையில் பாஜகவினா் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனைச் சந்தித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் நிா்மல்குமாா் சுரானா கூறியதாவது: காரைக்காலுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வந்தபோது புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதி செய்தாா். பிரதமா் மோடி மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். அவரது வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனைச் சந்தித்துப் பேசினோம்.

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. எங்கள் கூட்டணியில் சேர லட்சிய ஜனநாயகக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏற்படுத்தியுள்ளது.

அதனால் புதுச்சேரியிலும் அந்தக் கட்சி கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. இதைத் தவிர கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ள வேறு சில கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள என்.ஆா். காங்கிரஸ், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது புரளி என்றாா் அவா்.

பேட்டியின்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜிஎன்எஸ். ராஜசேகா், பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.