/

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கைக்கணினி

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் டிஜிட்டல் கற்றலை வலுப்படுத்தும் நோக்கில், இளநிலை மருத்துவ மாணவா்களுக்கு டேப்லெட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு கைக்கணினிகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.

ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்வி நிறுவன செயலா் டாக்டா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.