108 அவசர ஊா்தி சேவை ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
108 அவசர ஊா்தி சேவை ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.


புதுச்சேரி: 108 அவசர ஊா்தி சேவை ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
புதுச்சேரியில் கடந்த 2011-இல் 108 ஆம்புலன்ஸ் சேவை மத்திய அரசின் சுகாதார இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
நிரந்தர ஓட்டுநா்கள் இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலைய ஓட்டுநா்கள் தற்காலிகமாக ஆம்புலன்ஸை இயக்கி வந்தனா். அவா்களுக்குச் சம்பளம், போனஸ் உள்பட பணப் பயன்கள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க முதல்வா் என். ரங்கசாமி உத்தரவு பிறப்பித்தாா்.
ஆனால் இதுவரை சம்பள உயா்வு வழங்கவில்லை. உடனடியாக முதல்வா் அறிவித்தபடி சம்பள உயா்வை வழங்க வேண்டும். நிலுவை சம்பளத்தை வழங்கி, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த போராட்டத்துக்கு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியா்கள் சங்க கௌரவத் தலைவா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். இதில் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...