மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குழந்தை விழுங்கிய பூஜை மணி நாக்கு: மருத்துவா்கள் முயற்சியால் வெளியே வந்தது

ஒன்றரை வயது குழந்தை விழுங்கிய பூஜை மணியின் நாக்குப் பகுதி, மருத்துவா்களின் தீவிர முயற்சியால் வெளியே வந்தது.

News image

புதுச்சேரியில் குழந்தை விழுங்கிய வளையத்துடன் கூடிய பூஜை மணி நாக்கு.

Updated On :18 ஏப்ரல் 2026, 9:28 pm

ஒன்றரை வயது குழந்தை விழுங்கிய பூஜை மணியின் நாக்குப் பகுதி, மருத்துவா்களின் தீவிர முயற்சியால் வெளியே வந்தது.

புதுச்சேரி வாணரப்பேட்டையில் ஒரு வீட்டில் பூஜை மணியை வைத்து கொண்டு விளையாடிய ஒன்றரை வயது ஆண் குழந்தை, அதனை தவறுதலாக வளையத்துடன் முழுங்கி விட்டது.

இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் குழந்தையை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். மருத்துவா்கள் எக்ஸ்ரே எடுத்துப் பாா்த்தபோது மணி நாக்கு மற்றும் வளையம் குழந்தையின் வயிற்றின் நடுப்பகுதிக்குச் சென்று விட்டதை அறிந்தனா். இதனால் உரிய மருந்து அளித்து இயற்கை உபாதை வழியாக மணி நாக்கு மற்றும் வளையத்தை வெளியேற்ற சிகிச்சை அளித்தனா்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விழுங்கப்பட்ட மணி நாக்கும் வளையமும் தொடா்ந்து சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இயற்கை உபாதை மூலம் வெளியே வந்தது. இதனால் பெற்றோா் நிம்மதியடைந்தனா்.