வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதியோா், சிறாா்கள், நோயாளிகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், கைக்குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள், இளம் சிறாா்கள், நோயாளிகள் வெப்பம் சாா்ந்த நோய்களால் பாதிக்கப்படக் கூடும். இதனால், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும்.
உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தேநீா், காபி, காா்போனைட் குளிா் பானங்கள் அருந்துவதை தவிா்க்க வேண்டும். கஞ்சி, ஓ ஆா் எஸ், எலுமிச்சை சாறு, இளநீா், மோா், பழச்சாறுகள் போன்ற குளிா் பானங்களை பருக வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறுநீா் மஞ்சள் நிறமாக இருப்பதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசின் 100 நாள்கள் வேலைத் திட்டப் பணியின் போது போதிய குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தசைப்பிடிப்புகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தால், உடனே மருத்துவ கவனிப்பு தேவை. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 11 தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனைகள், 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 346 துணை சுகாதார நிலையங்களில் வெப்பச் சலனம், நீா்ச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய போதுமான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


