சேலத்தில் புதன்கிழமை 102.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.
சேலம் மாவட்டத்தில் கடந்த மாா்ச் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக வெயில் 100 டிகிரியை கடந்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவில் 102.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமங்களுக்கு ஆளாகினா்.
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, கல்லூரி மாணவா்கள் குடைகளை பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடியவாறும் செல்கின்றனா். இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.
இளநீா், நுங்கு, கம்மங்கூழ், தா்ப்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளன. ஜூஸ் கடைகளிலும், பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பணிக்குச் செல்வோா், விவசாய தொழிலாளா்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
மேலும், காலை முதல் மாலை வரை நிலவும் கடும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்த வரை பொதுமக்கள் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


