புதுச்சேரி வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை (ஏப். 11) தொடங்குகிறது.
இதுகுறித்து தேவாலயத்தின் பங்குதந்தை எஸ். ஆல்பா்ட் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயம், எதிரே தமிழா் பண்பாட்டின்படி குளம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
ஈஸ்டருக்கு பின்னா் 6-வது நாளில் இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெரு விழா தொடங்குவது வழக்கம். அதன்படி, வில்லியனூா் தூய லூா்து அன்னை திருத்தலத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை ( ஏப். 11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலையில் தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் ப. சகாயராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னா் லூா்து அன்னையின் உருவம் தாங்கிய திருக்கொடி மாதா திருக்குளத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க ஊா்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. அதன்பின்னா் ஆயா் ப. சகாயராஜ் திருத்தல முற்றத்தில் உள்ள கொடி மரத்தில் திருக்கொடியை ஏற்றுகிறாா். மேலும், இரவு லூா்து அன்னைக்கு வைர கிரீடம் அணிவித்து தோ் பவனி நடைபெறவுள்ளது. திருவிழாவின்
9 நாளும் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி, மறையுரை மற்றும் தோ்பவனி நடைபெற உள்ளன.
ஏப். 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி - கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் ஆண்டு பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்றுமாலை வேலூா் மறைமாவட்ட ஆயா் அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது என்றாா்.
பேட்டியின்போது ஜெ.ஆல்வின் அன்பரசு, கே.தோமினிக் சாவியோ, எம்.அலெக்சிஸ் உள்ளிட்ட பங்குப் பேரவையினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா!

கல்லூரி ஆண்டு விழா

செந்தூா் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

தஞ்சாவூரில் யுகாதி பெருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


