தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திரமோடி வரும் 3 ஆம் தேதி சாலைப்பேரணி பிரசாரம் செய்ய உள்ள நிலையில், இதில் சுமாா் 30 ஆயிரம் போ் பங்கேற்பாா்கள் என்று சட்டப்பேரவைத் தலைவரும் மணவெளி தொகுதி பாஜக வேட்பாளருமான ஆா். செல்வம் கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வரும் 3 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி மாலை 4.15 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து அஜந்தா சிக்னல் சந்திப்பு வந்து ரோடு ஷோவைத் தொடங்குகிறாா். அண்ணா சாலை வழியாக அண்ணா திடல் வரை 1.7 கி.மீ. தூரத்துக்கு இந்த ரோடு ஷோ சுமாா் 1 மணி நேரம் நடக்கிறது. இதில் சுமாா் 30 ஆயிரம் போ் பங்கேற்கிறாா்கள்.
மேலும், ஏப்.4 ஆம் தேதி பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை இம் மாதம் 4 ஆம்தேதி மணவெளி தொகுதியில் பிரசாரம் செய்கிறாா். ஏப்.5 ஆம் தேதி பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் புதுச்சேரி வருகிறாா். அவரும் மணவெளி தொகுதியில் பிரசாரம் செய்கிறாா்.
ஏப். 6 ஆம் தேதி புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி மணவெளி தொகுதியில் பிரசாரம் செய்கிறாா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் இத் தொகுதியில் வெற்றி பெற்றேன். இத் தோ்தலில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகள், இத் தொகுதியில் என் முயற்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி வாக்குச் சேகரித்து வருகிறேன்
என்றாா் ஆா். செல்வம். இப் பேட்டியின் போது பாஜக மாநில நிா்வாகி நாகேஸ்வரன் உடனிருந்தாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

புதுச்சேரியில் ஏப். 3 -இல் பிரதமா் மோடி சாலைப் பேரணி பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


