நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அதிக வருவாய் பெற்றுத் தரும் கல் நண்டுகள்

காரைக்கால், ஜூன் 21: உள்நாடு, வெளிநாடுகளில் நல்ல விலைபோகக் கூடிய கல் நண்டுகளை வளர்க்கும் பணி காரைக்காலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   ÷காரைக்கால் மாவட்டம் கருக்களாச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:28 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், ஜூன் 21: உள்நாடு, வெளிநாடுகளில் நல்ல விலைபோகக் கூடிய கல் நண்டுகளை வளர்க்கும் பணி காரைக்காலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

÷காரைக்கால் மாவட்டம் கருக்களாச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையப் பண்ணையில் கொடுவா மீன்கள் மற்றும் கல் நண்டுகள் வளர்க்கப்படுகின்றன.

÷நாகை மாவட்டம், திருமுல்லைவாசல் அருகே உள்ள தொடுவாய் கிராமத்தில் செயல்படும் நண்டு குஞ்சுப் பொறிப்பகத்தில் இருந்து நண்டு குஞ்சுகள் காரைக்கால் கொண்டுவரப்பட்டு, அங்கு பண்ணையில் குட்டை, கூண்டு முறையில் வளர்க்கப்படுகின்றன.

÷கூண்டு முறையில் நாட்டிலேயே முதல் மையமாக உள்ள இந்த நண்டு வளர்ப்புப் பண்ணைக்கு 0.5 செ.மீ. நீளமுள்ள லார்வா எனப்படும் நண்டு குஞ்சுகள் கொண்டு  வரப்பட்டு, கூண்டில் வளர்க்கப்படுகின்றன.

÷இவை ஒரு மாதத்தில் 2 முதல் 4 செ.மீ. நீளம் வளரும். சுமார் 30 முதல் 40 கிராம் வரை வளர்த்து, பின்னர் அவற்றை நாடு முழுவதுமுள்ள நண்டு வளர்ப்பு மையங்களுக்கு அனுப்பி வைப்பர்.

÷தற்போது, இம்மாதம் 24-ம் தேதி ரயில் மூலம் ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கும், ஜூலை 4-ம் தேதி விமானம் மூலம் கொல்கத்தாவுக்கும் நண்டு குஞ்சுகளை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூண்டில் வளரும் நண்டுகளை தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

÷இதுகுறித்து இந்த மையத்தின் உதவித் திட்ட மேலாளர் கணேஷ் கூறியது:

÷நாட்டிலேயே தொடக்க நிலை நண்டு குஞ்சுகள் வளர்க்கும் மையமாக இது செயல்பட்டு வருகிறது. நண்டு குஞ்சுகள் குறிப்பிட்ட அளவு வளர்ந்த பின்னர், கூடுதல் வளர்ச்சிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

÷தற்போது மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறோம். 0.5 செ.மீ. நீளத்தில் காரைக்கால் பண்ணையில் விடப்படும் நண்டு குஞ்சுகள், ஒரு மாதத்துக்கு பின்னர் தரம் பிரிக்கப்பட்டு தனித்தனிக் கூண்டுகளில் வளர்க்கப்படும். 8 மாதங்களில் அவை முழு வளர்ச்சியை அடையும்.

÷கூண்டில் அவை வளர்க்கப்படுவதால், சராசரியாக ஒவ்வொன்றும் 750 கிராம் முதல் ஒரு கிலோ வரையிலான எடையில் இருக்கும். இதற்கு ஜிலேபி ரக மீன்கள் உணவாகத் தரப்படும். உவர் நீர், நல்ல நீரிலும் இவற்றை வளர்க்கலாம்.

÷இந்தப் பண்ணை மூலம் வளர்க்கப்படும் கல் நண்டுகள் கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. இதுவே வெளிநாடுகளில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை என நண்டின் அளவைப் பொருத்து விற்கப்படுகிறது.

   காரைக்காலில் ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் வளர்க்கப்படும் இந்த நண்டுகளுக்கு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.÷கடந்த 5 மாதங்களில் உள்நாட்டில் உள்ள வளர்ப்பகங்களுக்கு 19 ஆயிரம் நண்டு குஞ்சுகளை அனுப்பியுள்ளோம்.

÷பயிற்சி அளிக்கப்படும்: கடந்த ஓராண்டில் கொடுவா மீன்கள், நண்டுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இங்கு வந்து தேவையான தகவல்களை அறிந்து கொண்டு செல்கின்றனர். வளர்ப்புக்குரிய பயிற்சிகளும் அளித்து வருகிறோம்.

÷நிலம் அதிகமாக பயனற்று வைத்திருப்போர் இதுபோன்ற உயிரினங்கள் வளர்ப்பில் ஈடுபடும் போது, அதிக வருவாயை ஈட்ட முடியும் என்கிறார் கணேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.