பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு விருது கிடைத்தது குறித்து...

News image
படத்தின் போஸ்டர், விருது வென்ற படக்குழுவினர். - படங்கள்: இன்ஸ்டா / ரிமா தாஸ்.
Updated On :22 பிப்ரவரி 2026, 9:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு, ’கிரிஸ்டல் பியர் ஸ்பெஷல் மென்ஷன் விருது’ கிடைத்துள்ளது.

பெர்லின் திரைப்பட விழாவில் ’நாட் எ ஹீரோ’ என்ற படத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவுக்கு ரிமா தாஸ் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.

அசாமைச் சேர்ந்த இயக்குநர் ரிமா தாஸ் (44 வயது) முதன்முதலாக வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற படத்தின் மூலமாக தேசிய விருது பெற்று பிரபலமானார்.

அடுத்து இவர் இயக்கிய ’புல்புல் கேன் சிங்’, ’வில்லேஜ் ராக்ஸ்டார் 2 ’ ஆகிய படங்கள் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்தன.

தற்போது, ’நாட் எ ஹீரோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கியுள்ளார்.

இளம் தலைமுறைகளைப் பற்றின இந்தப் படத்திற்கு பெர்லின் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொழில்முறை நடிகர் நடிகைகள் அல்லாத தனது சொந்த ஊர் மக்களை வைத்தே எடுக்கப்படும் ரிமா தாஸ் படங்களுக்கென்று சினிமா துறையில் வரவேற்பு இருந்து வருகிறது.

Rima Das' 'Not a Hero' gets honoured at Berlin International Film Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.