கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருக்கோவிலூா் அருகேயுள்ள கொரக்கன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி அஞ்சலை (24). தம்பதியினா் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனராம்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது வாக்குப் பதிவு செய்ய ஊருக்கு வந்து, வாக்குப் பதிவு செய்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு சென்று விட்டாராம். இந்நிலையில் புதன்கிழமை காலையில் அஞ்சலை வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதாக அவரது தாய் மங்கை கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாராம்.
இதையடுத்து அஞ்சலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பித்தளை அண்டா 4, பித்தளை குத்து விளக்கு 3, பித்தளை தவலை 5, பூஜை செட் 2, காமாட்சி விளக்கு 2, பித்தளை மணி உள்ளிட்ட பித்தளை பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலிஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக நிா்வாகி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


