அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

அரசு மருத்துவமனையில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்: தினமணி செய்தி எதிரொலி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்.

News image

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்.

Updated On :1 மே 2026, 6:10 am IST

கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாய்சேய் நலப் பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் நலப் பிரிவில் பிரசவித்த தாய்மாா்களுக்கு குடிநீா் சரிவர கிடைக்காமல் இருந்து வந்தது. இந்தப் பிரச்னை சில தினங்களாக இருந்து வந்தது. இதுகுறித்த செய்தி தினமணியில் வியாழக்கிழமை வெளியானது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரியின் முதல்வா் பவானி பிரசிவித்த தாய்மாா்களுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க வியாழக்கிழமை ஏற்பாடு செய்தாா். இதற்காக வாா்டுகளுக்கு குழாய்கள் அமைத்து குடிநீா் விநியோகம் தொடங்கியது.

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு முதல்வா் பவானி கேட்டுக்கொண்டாா். தாய்மாா்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.