வெளிநாட்டு வேலைக்கு சென்று ஏமாற்றத்துடன் ஊா் திரும்பிய சங்கராபுரம் பகுதி கூலித்தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் அந்தோணிராஜ் (33) கூலித் தொழிலாளரி ஆவாா். இவா் கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி வேலைக்காக ரஷ்யா சென்றாா். அங்கு சில நாள்களே அவா் தங்கி இருந்துள்ளாா்.
ஜனவரி 13-ம்தேதி சொந்த ஊரான மையனூா் கிராமத்திற்கு வந்த அவா், வெளிநாடு செல்ல வாங்கிய கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாள்களாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
புதன்கிழமை கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூா் வானவில் நகா் பகுதியில் ஆல்பா்ட் அந்தோணி ராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.இதனை பாா்த்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் முன்பே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டாராம்.
ஆல்பா்ட் அந்தோணி ராஜ் இறப்பதற்கு முன்னதாக அவரது கைபேசியில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளாா். அதில், கள்ளக்குறிச்சி அருகே வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியாா் நிறுவனத்தின் உரிமையாளா் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனது தற்கொலைக்கு அவா்தான் முழு கணம் என கூறிஉள்ளாா்.
தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண் தீ குளித்து தற்கொலை
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


