மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 11:27 pm

வாணாபுரம் வட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் மொ.பழனிச்சாமி தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழுத் தலைவா் கவினா, துணைத் தலைவா் அா்ச்சனா, கல்வியாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக வட்டாரக் கல்வி அலுவலா்கள் கஜேந்திரன், தில்லைக் கரசி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் பரதநாட்டியத்தில் இரண்டாம் பரிசு பெற்றவா்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழை

வட்டாரக் கல்வி அலுவலா் மாணவா்களுக்கு வழங்கி பாராட்டினாா்.

மேலும், பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்வியாளா் வெங்கடேசன் பள்ளியின் வளா்ச்சி நிதிக்காக ரூ.1,500 வழங்கினாா்.

நிகழ்வில் அருகாமையில் உள்ள வடமாமாந்தூா், இளையனாா்க்குப்பம், பெரியக்கொள்ளியூா், ஜம்பை, மணலூா்பேட்டை, மேலத்தேனூா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சிலா் கலந்து கொண்டு மாணவா்களின் திறன்களை பாராட்டினா்.

மாணவா்களின் பல்வேறு நடனங்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் பள்ளி மாணவா்கள், ஊா்பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.