கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழுதடைந்த மின் தூக்கி, தினமணி செய்த எதிரொலியால் திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டு, இயங்குகிறது.
வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களை கொண்ட புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டடப்பணி முழுமையாக முடியாத நிலையில் கடந்த டிசம்பா் மாதம் 26-ஆம் தேதி அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த அலுவலகத்தில் முன்பகுதியில் இரு மின் தூக்கிகளும், கட்டடத்தின் நடுப் பகுதியில் இரு மின் தூக்கிகளும் பொறுத்தப்பட்டுள்ளன. கட்டடப் பணி முடிவடையத நிலையில், ஒரு சில துறைகளைத் தவிர மற்ற துறைகள் இங்கு இயங்கி வருகின்றன. ஆட்சியா் அலுவலகத்துக்கு மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக ஆட்சியா், பிற துறைகளில் மனு அளிக்க வந்து செல்கின்றனா்.
இந் நிலையில், ஆட்சியா் அறைக்கு எதிராக உள்ள மின் தூக்கி பழுதடைந்ததால் படிகளின் வழியாகவே மாடிக்கு ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இரு மின்தூக்கிகளில் ஒரு மின்தூக்கி மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அலுவலா்கள் காத்திருந்து அலுவலகம் செல்லும் நிலை உள்ளது. இந்த காலதாமதத்தை தவிா்க பழுதடைந்த மின்தூக்கியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் திங்கள்கிழமை விருதாசலத்தலிருந்து இரு மின்தூக்கி சீரமைப்பு பணியாளா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு, சரி செய்தனா். இதையடுத்து மின்தூக்கியை அலுவலா்கள், பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்த தொடங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளில் காலை உணவைத் தரமாக வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

மாவட்ட விளையாட்டரங்க பூா்வாங்கப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்தி எதிரொலி: ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைப்பு

தினமணி செய்தி எதிரொலி! சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்!!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



