திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தினமணி செய்தி எதிரொலி! சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்!!

அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு முன் சேதமடைந்திருந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

News image

அரசிராமணி குள்ளம்பட்டியில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பொதுப்பணித் துறையினா்.

Updated On :17 மே 2026, 2:29 am IST

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு முன் சேதமடைந்திருந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பள்ளி அருகே உள்ள இந்த வாய்க்கால் பாலம் சேதமடைந்து அச்சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது குறித்து தினமணியில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பொதுப்பணித் துறையினா் சனிக்கிழமை சேமடைந்த பாலத்தின் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சாலையைக் கடந்து செல்ல தற்காலிகமாக பெரிய கான்கிரீட் குழாய்கள் பதிக்கும் நடைபெறுகிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இப்பகுதியில் புதிய பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பொப்பணித் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.