மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை சுமாா் 1500- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந் நிலையில், மாவட்ட அளவிலான கால்பந்து, கபடி, சிலம்பம், யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல், குத்துச்சண்டை, டேக்வாண்டோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பள்ளி மாணவா்கள் 79- போ் முதல் மூன்று இடங்களை பிடித்தனா். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை முதன்மை கல்வி அலுவலா் காா்த்திகா நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தாா்.
அப்போது, பள்ளித் தலைமையாசிரியா் திருஞானசம்பந்தம், உடல்கல்வி இயக்குநா் தணிகைவேல், உடல்கல்வி ஆசிரியா்கள் நடராஜன், தனசெல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்கள்: புதுச்சேரியில் 3 மையங்களில் சிறப்பு பயிற்சி

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

திண்டுக்கல்லில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்: 1,032 போ் பங்கேற்பு

விளையாட்டுப் போட்டிகள்: கீழப்பாவூா் அரசுப் பள்ளி சாதனை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


