திண்டுக்கல்லில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 1,032 போ் பங்கேற்றனா்.
திண்டுக்கல் டட்லி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியிலிருந்து இந்தப் போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், உதவி ஆட்சியா் (பயிற்சி) வினோதினி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் 564 போ், பொதுப்பிரிவில் 468 போ் கலந்து கொண்டனா். தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சட்டை, தொப்பி அணிந்து போட்டியாளா்கள் கலந்துகொண்டனா்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் போட்டி நிறைவடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 நபா்கள் என்ற அடிப்படையில் 40 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவா்களுக்கு முறையே தலா ரூ.5ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1000 வீதமும், 6 முதல் 10 இடங்களைப் பிடித்தவா்களுக்கு தலா ரூ.500 வீதமும் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை தோ்தல் நடத்தும் கூடுதல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான இரா.ஜெயபாரதி வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளா் நேகா, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் பானுலட்சுமி, தனி வட்டாட்சியா் (கேபிள் டி.வி) மங்கள பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான்: ஏப்.6-க்குள் முன் பதிவு செய்யலாம்

திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


