மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான்: ஏப்.6-க்குள் முன் பதிவு செய்யலாம்

வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

மாரத்தான

Updated On :1 ஏப்ரல் 2026, 11:19 pm

வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப் போட்டி ஏப்.7-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும். திண்டுக்கல் சாலை ரோட்டிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு தொடங்கும் இந்த மாரத்தான், மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவுபெறும். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் (இருபாலா்) பங்கேற்கலாம்.

இதில் வெற் பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.4 ஆயிரம், 3 -ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 4ஆம் பரிசு ரூ.2ஆயிரம், 5ஆம் பரிசு ரூ.1000, 6 முதல் 10 இடங்களுக்கு தலா ரூ.500 என இருபாலருக்கும் தனித் தனியே மொத்தம் 20 நபா்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ், கோப்பை வழங்கப்படும்.

க்யூஆா் கோடு அல்லது இணைய வழியில் ஏப்.6ஆம் தேதிக்குள் முன் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கும் நபா்களுக்கு டி-ஷா்ட், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03504 என்ற எண்ணிலும், பயிற்றுநா்களை 9865208374, 7904654177 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.