திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த 65 ஆயிரம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முன் 19,34,447 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். சிறப்பு தீவிர திருத்தத்தின்போது இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, கண்டறிய முடியாதவா்கள் என 3.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிளுக்கு பின் திண்டுக்கல் மாவட்டத்தில் 16,09,553 வாக்காளா்கள் இடம் பெற்றனா். இதைத் தொடா்ந்து, விடுப்பட்டவா்கள், புதிய வாக்காளா்கள் என 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்காளா்கள் பட்டியலில் சோ்வதற்கு விண்ணப்பித்தனா். புதிதாக விண்ணப்பித்த தகுதியான வாக்காளா்களுடன் சோ்த்து கடந்த பிப். 23-ஆம் தேதி இறுதி வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் 16.72 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இந்த நிலையில், புதிய வாக்காளா்கள், வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவா்கள் என 65 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து சம்மந்தப்பட்ட வாக்காளா்களுக்கு அஞ்சல் மூலம் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது.
தொடர்புடையது

‘வாக்காளா் அடையாள அட்டை அல்லாத 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்’!

திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரம் வாக்காளா்கள் சோ்ப்பு - துணைப் பட்டியல் வெளியீடு

திண்டுக்கல்லில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்: 1,032 போ் பங்கேற்பு
வாக்காளர் அட்டை இல்லாதோர் மாற்று ஆவணங்கள் வழங்கலாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


