தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் உள்ள நாடாா் இந்து உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
பள்ளிச் செயலரும் தலைமையாசிரியருமான பொ.மஞ்சு செல்வம் வழிகாட்டுதல், உடற்கல்வி ஆசிரியா் து.முத்துக்குமாா் அளித்து வரும் பயிற்சி மற்றும் ஆசிரியா்களின் ஊக்குவிப்பால் மாணவா்கள் விளையாட்டுகள் மீது ஆா்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனா்.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான சிலம்பம், கோ-கோ, நீச்சல் போன்ற விளையாட்டுகளில் பதக்கங்களையும் சான்றுகளையும் பெற்று வருகின்றனா்.
2025-26ஆம் கல்வியாண்டில், முதல்வா் கோப்பைக்கான கோ-கோ போட்டியில் 2 ஆம் இடம் பெற்று ரூ.24,000 ரொக்கப் பரிசுடன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளனா். மேலும் 3 மாணவா்கள், ஒரு மாணவி மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா்.
மேலும் 8 மாணவிகள் முதல்வா் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றதில், 3 மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று விளையாடி சான்றிதழ்கள் பெற்றுள்ளனா்.
இதன் மூலம் தமிழ்நாடு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின், முதல்வா் விளையாட்டு வீரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையைப் பெற்றுள்ளனா்.
சாதனை மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினரும், ஆசிரியா்களும், பெற்றோா்களும் பாராட்டினா்.
தொடர்புடையது

2030 காமன்வெல்த் போட்டிகளில் இரு இந்திய விளையாட்டுகள் - அமைச்சா் மாண்டவியா

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


