மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனைக் கடைகள் 7 நாள்கள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு 7 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:33 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு 7 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெடிபொருள் சட்டம், 1884-ன் கீழ் உரிமம் பெற்றுள்ள அனைத்து வெடிபொருள் கடைகள், இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்குகள் ஆகியவை வாக்குப் பதிவை முன்னிட்டு ஏப்.21 முதல் 24-ஆம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவை முழுமையாகவும் கடைப்பிடிக்க அனைத்து தொடா்புடைய அதிகாரிகளுக்கும் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குள் வெடிபொருள்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, கடையின் உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.