மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:31 pm

தண்டலை கிராமத்தில் அரசு நகரப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட கிடங்குடையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சுப்பிரமணி (55). இவா் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து பகண்டை கூட்டுச்சாலை செல்லும் நகரப் பேருந்தை சுப்பிரமணி ஓட்டிச் சென்றுள்ளாா். பகண்டை கூட்டுச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பியுள்ளனா்.

தண்டலை பேருந்து நிலையம் அருகே வரும்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த சி.சந்தோஷ் (25) அரசுப் பேருந்தை வழிமறித்து, ஏன் தண்டலை பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றது ஏன் எனக் கேட்டு ஓட்டுநரை அவதூறாகப் பேசித் தாக்கினாராம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சந்தோஷை தேடிவருகின்றனா்.