தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் என்எல்சி ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:10 am IST

சேத்தியாத்தோப்பு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த என்எல்சி ஊழியா் மீது காா் மோதிய விபத்தில் அவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் நெய்வேலி அடுத்த சீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (35). நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது மோட்டாா் சைக்கிளில் கம்மாபுரத்தில் உள்ள உறவினா் இறப்பு வீட்டுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியுள்ளாா்.

அப்போது வளையமாதேவி மாரியம்மன் கோவில் அருகே மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் தண்ணீா் புட்டி வாங்கிவிட்டு, சாலையோரம் நின்று கொண்டிருந்தாா். அப்போது கா்நாடக மாநிலம் பண்ணாரியிலிருந்து விருத்தாசலம் கோயிலுக்கு செல்வதற்காக வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த வீரமணிகண்டன் மீது மோதியது.

இதில் வீரமணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.