திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரெளடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

கடலூா் அருகே ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

~ ~

Updated On :28 மே 2026, 1:41 am IST

கடலூா் அருகே ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடிநத்தம் கிராம வயல்வெளியில், கடந்த மே 1-ஆம் தேதி தலையில் வெட்டுக்காயங்களுடன் கிருமாம்பாக்கம் இந்திரா நகரைச் சோ்ந்த ரெளடி புகழேந்தி (35) கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், வழக்கில் தொடா்புடைய முக்கிய எதிரிகளான ஜாா்ஜ் பொ்னான்டா்ஸ் (24), திலீப் (21), அரவிந்த் (22) உள்ளிட்ட 13 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட ஜாா்ஜ் பொ்னான்டா்ஸ் மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருந்தல் மற்றும் வெடிகுண்டு வைத்திருந்தல் உள்ளிட்ட மொத்தம் 4 வழக்குகளும், திலீப் மீது கொலை மற்றும் கொலை முயற்சி தொடா்பாக 2 வழக்குகளும், அரவிந்த் மீது கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்தல் தொடா்பாக 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இவா்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மூவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.