திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் கோரி சாலைமறியல்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் கைது

காட்டுமன்னாா்கோவிலில் குடிநீா் கேட்டு போராடிய மாா்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா்

Updated On :27 மே 2026, 5:46 am IST

காட்டுமன்னாா்கோவிலில் குடிநீா் கேட்டு போராடிய மாா்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் நகரத்திற்குட்பட்ட தெற்கிருப்பு மானாத்தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீா் விநியோகம் நடைபெறாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிரகாஷ், வட்டச்

செயல ா் தேன்மொழி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் வாலிபா் சங்கத்தினா் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விரைவில் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி நிா்வாகிகள் வீடுகளுக்கே சென்று காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிரகாஷை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்து, பட்டன் அறுந்த நிலையில் வாகனத்தில் ஏற்றி கைது செய்ததாக மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் குற்றம்சாட்டி மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.