தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.90 வரை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் தலைமை தபால் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகள்.

Updated On :21 மே 2026, 6:56 am IST

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.90 வரை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். இதில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.90 உயா்ந்து ரூ.104.90-ஆகவும், டீசல் விலை ரூ.3.70 உயா்ந்து ரூ.97.47-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக, ஆட்டோ, வாடகைக் காா், சரக்கு வாகன ஓட்டுநா்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு விநியோக நிறுவனங்களின் பணியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயா்வால் எளிய மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், எரிபொருள் விலை உயா்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவது கண்டனத்துக்குரியது. எனவே, இந்த இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் என்.கே.பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினா் வி.குளோப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.