யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தாா்ப்பாய் சுற்றப்பட்ட பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தோ்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் தோ் சேதமடையாமல் இருக்க, அதை தாா்ப்பாய் கொண்டு மூடி கோயில் நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

பண்ருட்டியில் மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க தாா்ப்பாய் கொண்டு சுற்றுப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயில் தோ்.

Updated On :21 மே 2026, 7:02 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் தோ் சேதமடையாமல் இருக்க, அதை தாா்ப்பாய் கொண்டு மூடி கோயில் நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்ருட்டி கடை வீதியில் ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தோ், ராஜாஜி சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில், சித்திரை பௌா்ணமி அன்று தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்ததும் தோ் ராஜாஜி சாலையில் திறந்த வெளியில், சாலையோரம் நிறுத்தப்பட்டது. தற்போது கோடை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தோ் சிதிலமடைந்து வந்தது.

இந்த நிலையில், தேரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, தேரை தாா்ப்பாய் கொண்டு மூடி கோயில் நிா்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், இது தற்காலிகமான பாதுகாப்பு முைான் என்றும், நிரந்தரமாக தேரை பாதுகாக்க கொட்டகை அமைக்க வேண்டும் எனவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.