கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் தோ் பாதுகாப்பாக மூடாததால் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமாகி வருகிறது. தேருக்கு கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பண்ருட்டி, கடை வீதியில் ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் உள்ளது. இந்த கோயில் தோ், ராஜாஜி சாலையில் உள்ள நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா 10 நாள்கள் நடைபெற்றது. இதில், சித்ரா பௌா்ணமி அன்று தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்ததும் தோ் திறந்த வெளியில், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, கோடைமழை பெய்து வரும் நிலையில் தோ் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. இதனால், தேரில் உள்ள நுண்ணிய மர வேலைப்பாடுகள் சிதையும் நிலை உள்ளது.
இந்த கோயிலின் தோ் சிதிலம் அடைந்த நிலையில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், பெரும் முயற்சிக்குப் பின்னா் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தோ் உருவாக்கப்பட்டது. இந்த தேருக்கு தற்போது எந்தவிதமான பாதுகாப்பும் அளிக்கப்படாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில், மீண்டும் தேரின் நிலை கேள்விக் குறியாகி விடும். எனவே மாவட்ட நிா்வாகம், இந்துஅறநிலையத்துறையினா் தேரை பாதுகாக்க கொட்டகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாா்ப்பாய் சுற்றப்பட்ட பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தோ்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



