தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் தொடக்கம்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா் முகாமில் பெற்றப்பட்ட 39 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களின் புகாா்களை நேரடியாக விசாரித்த காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :14 மே 2026, 2:54 am IST

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா் முகாமில் பெற்றப்பட்ட 39 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் நடைபெற்ற 17-ஆவது சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிகளின்படி கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தோ்தல் முடிவுற்று நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, புதிய அரசு பதவியேற்ற பிறகு, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில், கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் (பெட்டிஷன் மேளா), பொதுமக்களிடம் இருந்து 39 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது காவல் கண்காணிப்பாளா் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என். கோடீஸ்வரன், வி.ரகுபதி, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.