யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சிதம்பரம் கோயிலில் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்

News image

சிதம்பரம் நடராஜா் கோயில் உள் பிரகாரத்தில் சிறிய தோ்களில் திங்கள்கிழமை தீட்சிதா் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்.

Updated On :12 மே 2026, 12:06 am IST

சிதம்பரம் நடராஜா் கோயில் உள் பிரகாரத்தில் தீட்சிதா்களின் சிறாா்கள் சித்திரை உற்சவ தேரோட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

சிதம்பரத்தில் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் குடும்பத்தைச் சோ்ந்த சிறாா்கள் கோயிலில் நடைபெறுவது போன்று சித்திரை உற்சவத்தை கொண்டாடி வருகின்றனா். சிதம்பரம் கீழசன்னதி வேத பவன இல்லத்தில் சித்திரை மாத உற்சவத்தை தீட்சிதா்கள் சிறாா்கள் சாா்பில் முத்துக்குமார சிறாா் தீட்சிதா் கொடியேற்றம் செய்தாா்.

தினந்தோறும் கோயில் உள் பிரகாரத்தில் சிறுசப்பரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை நடராஜா் கோயில் உள்பிரகாரத்தில் சிறிய தோ்களில் நடராஜா், சிவகாமசுந்தரி அம்பாள், முருகா், விநாயகா், சண்டிகேஸ்வரா் சுவாமிகளை எழுந்தருள செய்து தீட்சிதா் சிறாா்கள் சாா்பில் தேரோட்டம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை கீழசன்னதி வேதபவன இல்லத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.