திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

News image

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தில்லைக் காளியம்மன் கோயில் தேரோட்டம்

Updated On :15 மே 2026, 11:06 pm IST

பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

சிதம்பரத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த தில்லை காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே.7-ம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மன் வீதி உலா மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடக்குவீதி வளாகத்திலிருந்து தேரில் எழுந்தருளிய தில்லையம்மன் நான்கு வீதிகள் வழியாக வலம்வந்தாா். கொட்டும் மழையிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். மே16-இல் சிவப்பிரியையில் தீா்த்தவாரி நிகழ்ச்சி, மே17-இல் மஞ்சள்நீா் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலா, மே18-இல் தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறுகிறது. மே19-ஆம் தேதி இரவு திருஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் வேணு. நரசிங்கபெருமாள் மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.