லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விருத்தாசலத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விருத்தாசலம் அருகே நிலை கண்காணிப்புக்குழுவினா் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:56 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே நிலை கண்காணிப்புக்குழுவினா் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருத்தாசலத்தில் கலைமணி தலைமையிலான நிலை கண்காணிப்புக்குழுவினா் ராஜேந்திரபட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்ததில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 32 புகையிலைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து தோ்தல் அதிகாரிகள் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூா் ஐயப்பன் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.