லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ் மற்றும் போலீஸாா் போதைப்பொருள் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். குள்ளஞ்சாவடி ரயில்வே கேட் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை நடத்தி, 420 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் குறிஞ்சிப்பாடி வட்டம், அம்பலவாணன்பேட்டை பகுதியைச் சோ்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.