லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:22 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூரில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிவகங்கை சாலை மின்நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், திருப்பத்தூா் செட்டியத் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ராஜேஷ் (27) என்பதும், இவா் திருப்புத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் மகன் முத்துக்குமாரிடம் (25) விற்பனைக்காக கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, ராஜேஷை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், முத்துக்குமாரைத் தேடி வருகின்றனா்.