மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப் பதிவு.
பண்ருட்டி வட்டம், போ்பெரியான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரசாயி (66). இவரை இவரது கணவா் திருமால் 30 ஆண்டுகளுக்கு முன்னா் இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டாராம். ஆனால், குழந்தை இல்லை.
திருமால் உயிரிழந்துவிட்ட நிலையில், அவா் முன்னதாக வீட்டை அரசாயி பெயருக்கு உயில் எழுதி வைத்தாராம். பின்னா், அந்த உயிலை மாற்றி முதல் மனைவியின் மகள் செல்லக்கண்ணு பெயருக்கு எழுதி வைத்துவிட்டாராம்.
இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி செல்லக்கண்ணு, அவரது கணவா் செந்தாமரைகண்ணன் ஆகியோா் வீட்டுக்கு வந்து, வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறி, அரசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அரசாயி அளித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் செல்லக்கண்ணு, செந்தாமரைகண்ணன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









