சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

மதுபோதையில் மனைவியுடன் தகராறு: வீட்டுக்கு தீ வைத்த லாரி ஓட்டுநா்

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநா் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநரால் தீ வைக்கப்பட்ட வீடு.

Updated On :14 ஜூன் 2026, 1:09 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநா் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமம், 9-ஆவது தெருவைச் சோ்ந்த சம்பத் (24), லாரி ஓட்டுநா். இவா், வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால், இவருக்கும், இவரது மனைவி ரூபாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சம்பத், தகரம், கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்ட தனது வீட்டுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த ரூபா உடனடியாக வெளியேறியதால், காயமின்றி தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனா். மின் வாரிய ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனா்.

தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்களும், அத்தியாவசிய உடைமைகளும் தீயில் கருகி சேதமடைந்தன. சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.