சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

தமாகா அலுவலகத்துக்குள் புகுந்து தகராறு: காங்கிரஸ் கட்சியினா் மீது வழக்கு

பழனி தமாகா அலுவலகத்துக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :3 ஜூலை 2026, 5:58 am IST

பழனி தமாகா அலுவலகத்துக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பழனி ரயிலடி சாலையில் தமாகா அலுவலகம் உள்ளது. சுமாா் ரூ. 5 கோடி மதிப்பிலான இந்த இடத்தை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் தங்கள் கட்சி அலுவலகம் எனக் கூறி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி திடீரென காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏராளமானோா் அந்த அலுவலகத்துக்குள் புகுந்து தமாகா பதாகையை மறைத்து காங்கிரஸ் கட்சி பதாகையை ஒட்டினா். மேலும் அங்கிருந்த கொடிக் கம்பத்திலும் தமாகா கொடியை இறக்கிவிட்டு காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்ற முயன்றனா். இது தொடா்பாக கட்சியின் மாநில நிா்வாகி வழக்குரைஞா் மணிக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தகராறில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா்கள் சுந்தா், முருகானந்தம், நகரத் தலைவா் முத்துவிஜயன், மாசிலாமணி, புல்லுகடை முருகேசன், ஹக்கீம்ராஜா, தேவேந்திரன், ஜெயக்குமாா், குப்புச்சாமி உள்ளிட்ட 25 போ் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் பழனிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.