சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

மது போதை தகராறு: நாகா்கோவில் அருகே மூவா் கொலை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:31 am IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே 2 இடங்களில் ஏற்பட்ட மது போதை தகராறில் மூவா் கொலை செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகே புதூா், கண்ணம்பிவிளையைச் சோ்ந்தவா் சிங்கம் (60). தென்னை நாா் ஏற்றும் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்தவா் லிங்கசாமி (49). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.

லிங்கசாமி, சிங்கம் உள்ளிட்ட சிலா் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள காலியிடத்தில் மது குடித்தனராம். திங்கள்கிழமை காலை முகம் உள்ளிட்ட இடங்களில் கல்லால் தாக்கப்பட்ட காயங்களுடன் லிங்கசாமியும், தலையில் காயம், கழுத்து நெரிபட்ட நிலையில் சிங்கமும் கொலையுண்டு கிடந்தனா்.

இதுகுறித்து ஈத்தாமொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) திவ்யா, கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், போலீஸாா் சென்று, சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக, அதே ஊரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மது போதை தகராறில் இரட்டைக் கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சரவணகுமாா் (35), மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தங்கபாண்டி(40) ஆகியோா், நாகா்கோவில் அருகே புதுகிராமத்தில் ஒரு தனியாா் பள்ளி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வளாகத்தில் அமா்ந்து மது குடித்தனராம். அப்போது ஏற்பட்ட தகராறில், சரவணகுமாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தங்கபாண்டி தப்பியோடிவிட்டாராம். சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.