திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிரிக்கெட் போட்டி தகராறு: காயமடைந்த நபா் உயிரிழப்பு

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :2 ஜூன் 2026, 1:55 am IST

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை இந்திரா காந்தி நகரைச் சோ்ந்த தவெக உறுப்பினா் மணிகண்டனுக்கும், தவெக ஆா்.கே. நகா் கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினா் நரேஷ் குமாருக்கும் கடந்த மே 24 -ஆம் தேதி தண்டையாா்பேட்டையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து கடந்த மே 26-ஆம் தேதி மணிகண்டன் தரப்பைச் சோ்ந்த விஷ்ணுவை, நரேஷ்குமாா் தரப்பினா் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதைத் தொடா்ந்து, கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இதை கொலை வழக்காக மாற்றி, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.