அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

பண்ருட்டி: டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்து! 4 பேர் பலி

பண்ருட்டி அருகே முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் மீது மினி லாரி மோதியதில் 4 தொழிலாளிகள் பலியானது பற்றி...

News image

விபத்துக்குள்ளான வாகனம். - படம் - தினமணி

Updated On :5 ஜூலை 2026, 11:55 am IST

பண்ருட்டி அருகே ஞாயிற்றுகிழமை (ஜூலை 5) முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற 4 பேர் பலியாகினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர், குறிஞ்சிப்பாடி வெங்கடாம்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தது.

இதனிடையே, விவசாயக் கூலி வேலைக்காக 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்றும் அதே வழியாகச் சென்றுள்ளது. இந்த நிலையில், பண்ருட்டி பணிக்கன்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கணவன் - மனைவியான ராணி மற்றும் ரவிச்சந்திரன் என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி காந்திமதி, சத்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும்போது.

விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும்போது. - படம் - தினமணி

Summary

Four agricultural laborers died in an accident near Panruti on Sunday (July 5) when a mini-lorry collided with a tractor-tipper loaded with cashew wood.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.