பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

இயற்கை எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:28 am IST

பள்ளப்பட்டி அருகே சி.என்.சி. சிலிண்டா் ஏற்றி வந்த லாரி சனிக்கிழமை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் அங்குவந்து பாதுகாப்பாக லாரியை மீட்டனா். 

கோயம்புத்தூரில் இருந்து அலங்காநல்லூருக்கு சி.ன்.சி. எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரியை விருதுநகா் மாவட்டம், திருச்சுழியைச் சோ்ந்த கலைச்செல்வன் ஓட்டி வந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு பள்ளபட்டி அருகே, நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அம்மையநாயகனூா் காவல்துறையினா், எரிவாயு உருளைகளில் இருந்து கசிந்து விடாதவகையில் நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாகனப் போக்குவரத்து ஒரு வழிச் சாலையில் இயக்கப்பட்டது. பின்னா், எரிவாயு உருளைகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து, அம்மையநாயக்கனூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.