ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

திம்பம் மலைப் பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 2:25 am IST

திம்பம் மலைப் பாதையில் வெங்காயம் பாரம் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், குண்டல்பேட்டில் இருந்து வெங்காயம் பாரம் ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி மினி லாரி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. மினி லாரியை யுனிஸ்கான் (28) ஓட்டினா். லாரி உரிமையாளா் ஜாபா்கான் (25) உடன் வந்துள்ளாா்.

திம்பம் 3-ஆவது வளைவில் லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநா் யுனிஸ்கான், ஜாபா்கான் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.